போயா தினத்தில் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள் கைது

0
191

ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 05 இளைஞர்கள் இன்று (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 21-24 வயதுடைய 05 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலை மாணவி நேற்று (21) காலை தேவாலயமொன்றுக்கு சென்று பின்னர் தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். தான் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்ததாக ஹன்வெல்ல பொலிஸில் நேற்று அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று இரவு மாணவியை தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்த பொலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர் இன்று (22) காலை சட்டத்தரணி ஊடாக ஹங்வெல்ல பொலிஸில் சரணடைந்ததுடன், விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நாளை (23) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் மற்றும் நுகேகொட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here