நாட்டில் நடப்பது அரசியல் சூதாட்டம் – சஜித்

0
14

இன்று நாட்டில் நடப்பது ஒரு அரசியல் சூதாட்டம் எனவும், துரதிஷ்டவசமாக 2.2 மில்லியன் மக்கள் இந்த அரசியல் சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது அதிகாரத்தை பாதுகாத்து பதவியை பாதுகாப்பதற்காகவே அனைத்தையும் செய்து வருகின்றது அன்றி மக்களின் நலனுக்காக அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

முழு நாடும் அரசியல் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் ஒருவரை ராஜபக்ஷ குடும்பப் பாதுகாப்பின் தலைவராக்கி அரசியல் சூதாட்டம் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் உட்பட பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்று (23) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தேசிய சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது.

மேலும் முறையான பொறிமுறையை எளிதாக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் இணைச் செயலகம் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here