நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து இந்திய ஊடகத்தில் வெளிப்படுத்திய சம்பந்தன்!

Date:

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே முக்கிய காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

The Hindu நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளால் தற்போதைய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள போதிலும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினையே 30 வருட சிவில் யுத்தத்திற்கும் அதற்காக செலவிடப்பட்ட பாரிய நிதிக்கும் வழிவகுத்ததாக தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், யுத்தம் இடம்பெறாதிருந்தால் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு காணப்படாத தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு தீர்வு காண்பதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை புதிய முகத்தினை காட்ட முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் The Hindu-விற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களும் தங்களின் இறைமையை பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒரு அரசியல் யாப்பின் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றி, நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் உலகிற்கு நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதையும் காண்பிக்க முடியுமெனவும் இரா.சம்பந்தன் குற்றிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...