பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் புர்கானி அணிய தடை

Date:

பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடையும் அனுமதிக்கப்பட்டது.

புர்கானி என்பது பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு சொல்லாக கூறப்படுகிறது. புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். இந்த உடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது இடங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உடை உள்ளதாக எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கிரினொபெலில் உள்ள கீழ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அதில், பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிந்து குளிக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பிரான்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், கிரினொபெலில் புர்கினி அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...