எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நாளை (25) முற்பகல் 9.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக் கிழமையான எதிர்வரும் 26 ஆம் திகதி இரண்டு மணித்தியாங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.