அவசர நாடாளுமன்ற கூட்டம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, உள்ளூர் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிதி விதிமுறைகளை விரைவாக அங்கீகரிக்க அடுத்த வாரம் அவசர நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற உள்ளது.

இந்த நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் கூட்டத் தொடராக நடைபெறும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், உள்நாட்டில் விற்கப்படும் சுமார் $36 பில்லியன் மதிப்புள்ள கருவூல பில்கள் மற்றும் கருவூலப் பத்திரங்கள் தொடர்பான கடனின் ஒரு பகுதி மறுசீரமைக்கப்படும் என்று அறியப்படுகிறது.

மேலும் சில அரச வங்கிகள் மற்றும் விசேட நிதியங்களால் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பில்கள் ஆகியவற்றின் வட்டியை குறைக்கவோ அல்லது கடன் காலத்தை நீடிக்கவோ வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை நாடாளுமன்ற ஒப்புதல் பெற அவசர அமர்வு கூட்டப்படவுள்ளது.

மேலும், சுயாதீன மத்திய வங்கி சட்டத்தையும் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஜூலை மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...