2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை அல்லாது சமல் ராஜபக்சவை முன்னிறுத்தியிருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தற்போதைய கதி ஏற்பட்டிருக்காது என அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
“அரசியல் அனுபவம் கொண்ட சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவரை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நாம் முன்வைத்திருந்தால் இந்த நிலைமையை நாங்கள் எதிர் கொண்டிருக்க மாட்டோம் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ரணில் அவர்களுடன் எங்களுக்கு அரசியல் முறுகல் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அந்த நேரத்தில் ஒரு கட்சி என்ற வகையில் சரியான முடிவை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம்.
சூரியவெவ பிரதேசத்தில் நேற்று (25) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பவித்ரா தேவி வன்னியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.