இன்று (27) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, துறைமுகங்கள், சுகாதார சேவைகள், அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
ஜூலை 10க்குப் பிறகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடையின்றி தொடரும் என்று அமைச்சர் கூறினார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.