மட்டக்களப்பில் வைத்து அமைச்சர் மனுஷ தொடர்பில் கிழக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்து

0
69

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் விசேட நிகழ்வு இடம்பெற்றது.

வேலைத்திட்டத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், பிரதி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஆரம்பித்து வைத்தனர்​.

ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் முதியோர் பெற்றோருக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் இத்திட்டம் இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் புதிய சிந்தனைகள் மிகவும் பாராட்டத்தக்கது என இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here