ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு-அமைச்சர் தம்மிக்க பெரேரா

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் எனது பிரத்தியேக பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்படும்.

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவலகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...