யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

0
150

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப் பிரதிநிதி எனக் கூறி பலருக்கு தரகராக செயற்பட முற்பட்டதாகவும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அச்சத்தினால் பெரிய ஜீப் வண்டிகளுக்குப் பதிலாக சிறிய விட்ஸ் ரக காரில் கொழும்பில் பயணிக்கும் அருந்திக பெர்னாண்டோ நேற்று (29) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து அதன் தலைவர் உள்ளிட்டோரை துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here