சம்பந்தன் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன்

0
113

மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்திற்கு தமிழரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர் ச.குகதாசன் நியமிக்கப்பட உள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி விருப்பு வாக்கு பட்டியல்.

ஆர். சம்பந்தன் விருப்பு வாக்கு – 21, 4222.

ச. குகதாசன் விருப்பு வாக்கு-167063

ஜீவகுமார் விருப்பு வாக்கு-133374

நித்தியானந்தம் விருப்பு வாக்கு-73105

சச்சிதானந்தம் விருப்பு வாக்கு-61416. சுலோசனா விருப்பு வாக்கு-50647. பிறேமகுமார்-விருப்பு வாக்கு-1590.

திருகோணமலை மாவட்டத்தின் 2020, பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பில் 21422, விருப்பு வாக்குகளைப்பெற்று இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக 2020, ஆகஷ்ட்,10ல் தெரிவாகினார்.

அவர் 30/06/2024, ல் இறைபதம் அடைந்துள்ளமையால் பட்டியலில் இரண்டாவது நிலையில் 16760, விருப்பு வாக்குகளை பெற்ற சண்முகம் குகதாசனின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் வர்தமானியில் இந்த வாரம் பிரசுரிப்பார்.

வர்தமானி அறிவிப்பு வெளியிட்ட பின்னர் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் (பெரும்பாலும் 09/07/2024,ல்) அவர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுக்கலாம்.

இதுதான் விகிதாசாரத் தேர்தலில் மக்கள் வாக்கெடுப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கான நடைமுறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here