வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு எச்சரிக்கை !-தபால் மா அதிபர்

0
154

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியதாக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரம் திறப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டுத் துறைகளில் கணிசமான அளவு தபால் பைகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here