ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக் – சட்டமா அதிபர் ஆட்சேபனை

Date:

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அங்கு, இந்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரசாங்க சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறும் கோரினார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...