சம்பந்தனின் புகழுடல் நாளை மாலை அக்கினியுடன் சங்கமம்

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் திருகோணமலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமாகவுள்ளது.

புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் அன்னாரின் புகழுடலுக்கு உணர்வுபூர்மாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

அதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளை திருகோணமலை, தபால் கந்தோர் வீதியிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள். சமயச் சடங்குகள் அதன்பின் ஆரம்பமாகும்.

அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல்வாதிகள், மத குருமார்கள், கல்விச் சமூகத்தினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...