சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு எரிபொருள் கூப்பன்கள்

0
80

சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அவர்களின் பயணத்திட்டத்தை வழங்கியதன் பின்னர் தேவையான எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயத்திற்குச் சென்று உரிய தகவல்களை வழங்கியதன் பின்னர் எரிபொருள் கூப்பன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here