விகாரைகளில் நடக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவது தேவையற்ற சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும், எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வாறான நிகழ்வுகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதாரணபத்திரன தெரிவித்துள்ளார்.
நவகமுவ பொமிரிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதுடன், பொலிசார் உடனடியாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தில் துறவி மற்றும் இரு பெண்களைத் தாக்கியது தவறானது என்றும், இதுபோன்ற சம்பவங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், குறித்த பிக்கு தொடர்பில் மகாநாயக்க தேரர்களே தீர்மானம் எடுக்க வேண்டுமென தெரிவித்த அமைச்சின் செயலாளர், புத்தசாசன அமைச்சு அதில் தலையிடாது எனவும் தெரிவித்துள்ளார்.