மலேசிய இந்திய காங்கிரஸுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராட்டு

0
75

வெளிநாட்டு வாழ் இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உட்பட அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் அழைப்பில் அங்கு சென்ற ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய மக்களுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்கும் சேவையினால் மிகவும் கவரப்பட்டதாக கூறியுள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ விக்னேஷரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சரவணன் முருகன் எம்.பி மற்றும் பிற அரசியல் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்காக பாராட்டுளையும் தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தலைவர் தமது சாதனை புத்தகத்தையும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இதன்போது  வழங்கி வைத்தார்.

வெளிநாட்டு வாழ் மலேசிய இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பான சேவைகளை தொடர தமது வாழ்த்துகளை ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here