கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள் இடையேயான கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது

0
301

கட்சி சார்பற்ற போராட்டத்தின் தலைவர்கள் குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவிருந்தது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், கலந்துரையாடல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கட்சித் தலைவர்கள் போராட்டத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

விவாதம் ஒத்திவைக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் போராட்டத்தின் தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் 25 போராட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here