சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்கக் கூடாது என்றும், உலக பெறுமதி அமைப்புகளுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்திய நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.