வலம்புரி சங்குடன் 6 பேர் கைது

Date:

ஜா – எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயணித்த கெப் வாகனம் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிரிந்திவெல, நிட்டம்புவ, அங்கொடை, மாளிகாகந்தை பகுதிகளைச் சேர்ந்த 06 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...