சுகாதார சேவை பயங்கரவாதமாக மாறிவிட்டது

0
203

நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத்துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தின் 8ஆவது குழு அறையில் பாராளுமன்ற குழுவொன்றை ஸ்தாபிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி விரயம், மோசடி, திருட்டு, முறைகேடு, தரம் குறைந்த மருந்து, மருத்துவ உபகரணங்கள், தகவல்களை மறைத்தல், அரச அடக்குமுறை, அரச பயங்கரவாதம் போன்ற அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி இலவச சுகாதாரக் கொள்கையை அழிக்கும் திட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here