கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்திலின் அப்பன் சொத்தா? எனக் கேட்ட ஹாபிஸ் நஷீருக்கு இன்னும் பதிலடி இல்லை!

0
120

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபீஸ் நஷீர் வௌியிட்டுள்ள கருத்தினால் கிழக்கு அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஹாபீஸின் கருத்தை கண்டித்தோ அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் நெருங்கி செயற்படும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அல்லது சிவனேசதுறை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் இதுவரை கருத்து வௌியிடவில்லை.

“கிழக்கு மாகாணம் என்பது செந்தில் தொண்டமானின் அப்பாவினதோ அல்லது அவரினதோ சொத்து கிடையாது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் கிழக்கிலே இறங்கவிடக்கூடாது. நான் முதலமைச்சராக இருந்தவன். ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்கில் இடமாற்றங்களை வழங்கியது கிடையாது” என அமைச்சர் ஹாபீஸ் நஷீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மலையகத்தில் செய்த ‘வேலை’களை கிழக்கில் செய்ய விடமாட்டோம். கிழக்கு மாகாணத்தை சீரழிக்க இடமளிக்கமுடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் எழுந்த பிரச்சினையின் போதே இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் அழுத்தம் காரணமாகவே காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் ஹாபிஸ் நாஷீர் கருதுகிறார்.

இது விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் இருந்து இதுவரை எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here