10 கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படை வீரர் கைது

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பேரூந்தில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடம் தலா இரண்டு கிலோ எடையுள்ள 5 கேரள கஞ்சா பொதிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...