பசில்-நாமல் நடத்திய முக்கிய சந்திப்பை புறக்கணித்த மொட்டு பிரபலங்கள்.!!

0
68

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விசேட கூட்டத்திற்கு கட்சியின் கண்டி மாவட்ட தலைவர்கள் மூவரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12ஆம் திகதி மொட்டு கண்டி மாவட்டத்தின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் இல்லத்தில் விசேட கூட்டம் இடம்பெற்றதுடன் பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய செயலாளர் நாயகம் சாகர காரியவசத்தினால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அமைச்சரவை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.

நாமல் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், மேற்படி அமைச்சர்கள் பங்கேற்காததால், எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here