யாழ்ப்பாணம் – சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தற்போதைய உரிமையாளரான அமரர் கைலாசபதிப்பிள்ளையின் துணைவியாரான திருமதி கைலாசபதிப்பிள்ளை இந்த கள்ள உரிமம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்து அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வரலாற்று உரிமம் மற்றும் வல்லவேஸ்வர குருக்களுக்கு காணப்படும் அதிகாரம் குறித்தும் தௌிவுபடுத்தியுள்ளார்.
அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் ஆரம்ப உரிமையாளர்களாக தனது கணவரான அமரர் கைலாசபதிபிள்ளையின் பூட்டன் அமரர் அருணாச்சலம், அதன்பின் பாட்டன் கைலாயர் ஆகியோர் நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளனர்.
அதன்பின் 1940ம் ஆண்டுகளில் சுப்பிரமணியம் என்ற தனது பாட்டன் ஆலய பொறுப்பாளராக செயற்பட்டதாகவும் 1960ம் ஆண்டுக்குப் பின்னர் ஆலயத்தின் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளையும் தானும் தனது கணவரான அமரர் கைலாசப்பிள்ளையும் எனது இளைய சகோதரி மற்றும் அவரது கணவரான திரு.திருமதி.அம்மையப்பர் தம்பதிகளும் பொறுப்பேற்று நடத்தி வருவதாகவும் திருமதி கைலாசப்பிள்ளை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தானும் தனது கணவரும் மற்றும் ஏனைய நிர்வாகிகளும் இணைந்து 2010 – 2012ம் ஆண்டு காலத்தில் ஆலய மீள் கட்டுமாண பணிகளை தங்களது சொந்த நிதியில் செய்ததாகவும் 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஆலய பூமிக்குள் 2014ம் ஆண்டு புதிதாக நாகம்மாள் ஆலயம் ஒன்றை அமைத்ததாகவும் 2015ம் ஆண்டு நாகம்மாள் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேகம் நடத்தியதாகவும் 2013 – 2023ம் ஆண்டுவரை பல்வேறு திருத்தங்கள், உற்சவங்கள் நடத்தியதாகவும் இவை அனைத்திற்கும் சொந்த பணத்தை செலவிட்டதாகவும் திருமதி கைலாசப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய பிரதம குருக்களாக செயற்பட்டுவரும் வல்லவேஸ்வர குருக்கள் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலயத்திற்கு உரிமை கோரி போலி ஆவணம் தயாரித்துள்ளதாக தனக்கு தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைவதாகவும் திருமதி கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
வெங்கடேஸ்வர குருக்கள் ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் பிரதம குருக்களாக பணியாற்றியதுடன் அவரது மறைவின் பின் அவரது மகன் குஹசாமி குருக்கள் பிரதம குருக்களாக இருந்ததாகவும் அவரது மறைவின் பின் மகன் வல்லவேஸ்வர குருக்கள் தற்போது பிரதம குருக்களாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ள திருமதி கைலாசபதிப்பிள்ளை இவர்களுக்கு ஆலய நிர்வாகத்தால் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதோடு தங்குமிட வசதிக்காக வீடுகள் அமைக்கவும் நிதி உதவி வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
1995ம் ஆண்டு யுத்த காலத்தில் காணாமல் போயிருந்த வல்லவேஸ்வர குருக்கள் 2012ம் ஆண்டு மீண்டும் வந்தபோது ஆலய பொறுப்பாளர்கள் என்ற வகையில் தானுத் தனது கணவரும் நியமனக் கடிதம் வழங்கி வைத்ததாகவும் திருமதி கைலாசப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
வல்லவேஸ்வர குருக்கள் அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களாக நியமிக்கப்பட்டாரே தவிர ஆலயத்தின் உரிமையாளராகவோ நிர்வாகத்தின் பொறுப்பாளராகவோ நியமிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் தமது நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கவேண்டிய வல்லவேஸ்வர குருக்கள் நம்பிக்கை துரோகம் செய்து போலியான வகையில் ஆலய காணியை தமது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளமை பாரிய துரோகச் செயல் என திருமதி கைலாசபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்து முறைப்படி கல்வி கற்று வளர்ந்த பிரமணரான வல்லவேஸ்வர குருக்கள் போலி ஆவணத்தின் மூலம் ஆலய காணியை அபகரிப்பு செய்துள்ளமை இந்துக்களின் நம்பிக்கையில் ‘பாரிய தெய்வக் குற்றம்’ என திருமதி கைலாசப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பத்துடன் ஐக்கியமாக இருந்து ஆலய பணியை கவனித்து வந்த வல்லவேஸ்வர குருக்கள் இவ்வாறு கள்ளத்தனம் செய்துள்ளமையால் தான் மனம் நொந்து அதிருப்தியில் இருப்பதாகவும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள திருமதி கைலாசபதிப்பிள்ளை, வல்லவேஸ்வர குருக்களின் இந்தக் கள்ளத்தனம் குறித்து ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வல்லவேஸ்வர குருக்களின் மகனும் மருமகளும் தற்போது கனடாவில் வசித்து வருகின்றனர்.
அத்துடன் வல்லவேஸ்வர குருக்களின் சகோதரர் லவன் குருக்கள் அவுஸ்திரேலியா சிட்னியில் முருகன் கோவில் ஒன்றை நடத்திச் செல்கின்றார்.
வல்லவேஸ்வர குருக்களின் இந்த திருட்டுத்தனம் குறித்தும் அவரது கனடா மற்றும் அவுஸ்திரேலிய குடும்பங்களின் திருகுதாலம் குறித்தும் அடுத்து வரும் கட்டுரைகளில் எதிர்பாருங்கள்…
கடவுளுக்கு தொண்டு செய்து பக்தர்களுக்கு தர்மத்தை போதிக்க வேண்டிய ருத்ராட்சம் அணிந்த உண்மையான பிராமணனாக இருக்க வேண்டிய வல்லவேஸ்வர குருக்கள் ருத்ராட்சம் அணிந்த பூனையாக மாறி தில்லுமுல்லு செய்து வருவது முழு பிராமணர் சமூகத்திற்கும் இழுக்காகும்.
வல்லவேஸ்வர குருக்கள் கள்ளத்தனமாக தயாரித்துள்ள ஆவணம் இதோ…