அனுராதபுரத்தை அண்மித்த பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (16) பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், பொத்தனேகம, 02ம் கட்டை மற்றும் ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.