நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19ம் திகதி) விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே நீதியமைச்சினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரஞ்சனின் தண்டனை காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அவர் மன அதிருப்தியில் இருப்பதாகவும், பதில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை ஏற்று வெளியில் வருவாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.