புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் 130க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
லங்கா நியூஸ் வெப்பிற்கு கருத்து தெரிவித்த அவர், டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சமகி ஜன பலவேகவுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.