முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் பிணை

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பான மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ,  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குறித்த மூவருக்கும் இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் பிரிதொரு வழக்கில் இவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...