ஜனாதிபதி தலைமையில் புதனன்று சர்வகட்சி கூட்டம்

0
106

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (26) சர்வகட்சி கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சர்வக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என நம்பப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து 13A இல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here