9 தமிழக மீனவர்கள் கைது

Date:

தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை.

எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடருகின்றது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து அழைத்து வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...