பொதுஜன மாவட்டத் தலைவர்கள் 12 பேர் ரணிலுடன் இணைவு

0
43

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை நியமிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த பொஹட்டுவ தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு பெரும்பான்மை கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 பொஹொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர்கள் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் அந்த சபை உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here