மகிந்தவின் மனதில் யார்? ரணிலா தம்மிக்கவா?

0
49

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ,

”உரிய நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. வெற்றிபெறக்கூடிய வேட்பாளரையே முன்னிறுத்துவோம்.

ரணில் வேட்பாளரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், தேர்தல் இருக்கிறது. தம்மிக்க பெரேரா, அந்த பெரேரா எனக் கூறுகிறார்கள்.

என் மனதில் இருக்கும் வேட்பாளரை உரிய நேரத்துல சொல்றேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here