அமைச்சின் செயலாளரை கைது செய்ய உத்தரவு

0
83

தொழில் அமைச்சின் செயலாளரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் இரசாயன கழிவுகளை அகற்றும் தொட்டியில் தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக களுத்துறை மாவட்ட முன்னாள் தொழிற்சாலை ஆய்வு பொறியாளர் ஒருவருக்கு பொய் சாட்சியம் அளிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதன்படி, அவரை கைது செய்து 7 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபர் ஊடாக ஆஜர்படுத்துமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here