ரணிலால் பிளவுபட்ட மொட்டுக் கட்சி : கோபமடைந்த நாமல்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் விளைவு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிளவு என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாமல் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம்.எமக்குப் பொருத்தமில்லாத விடயங்களை அவர் செய்தாலும் இன்றுவரை நாங்கள் எதுவும் கூறவில்லை.

எனினும், கட்சி இரண்டாகப் பிளவுபட்டதுதான் கட்சியாக எமக்குக் கிடைத்த பரிசு.எனவே, எதிர்காலத்தில் அரசியல் முடிவை எடுப்போம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் உண்மையாகவே உதவி செய்தோம். அவர் இவ்வாறு செய்வது பொதுஜன பெரமுனவிற்கு அல்ல.அது அவரின் பழக்கம்.

ஐ.தே.க, சுதந்திரகட்சி, நல்லாட்சி அரசாங்கம், ஜே.வி.பி மற்றும் விடுதலை புலிகள் அனைத்தும் பிளவுபட்டது, அவரை கட்சிக்கு அழைத்து வந்த போதே எமக்கு தெரியும்.

நாங்கள் இன்னும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகிறோம். பொருத்தமான இடத்திற்கு வந்தால் ஒரு அரசாங்கத்தைப் பற்றி கலந்துரையாட நாங்கள் தயார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.” என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...