தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே QR முறை

Date:

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், இன்றும் இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதும் பல கட்டங்களாக விரிவுபடுத்துவதே எமது நோக்கம். இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். மேலும், 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டத்தை நடத்தினோம். இதில் பெறப்பட்ட தகவல்களை கணினியில் உள்ளிட்டு அடுத்த சில நாட்களில் இந்த முறையை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...