Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார்.
இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு – முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ள கௌரவ கேரி ஆனந்தசங்கரி அவர்களிற்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இவர் நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு மன்றங்களில் கனடிய தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இவர் முதன்முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டார்.