ஹட்டன் கொட்டகலை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த (25ம் திகதி) வைக்கப்பட்டிருந்த இரண்டு கேன்களை திம்புல பத்தனை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஏற்றிச் சென்றது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
ஹட்டன் கொட்டகலை நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஜெனரேட்டருக்கான டீசல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக, பல்பொருள் அங்காடி ஊழியர்கள் இரண்டு வெற்று கேன்களை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று கடந்த (25) ஆம் திகதி ஒப்படைத்துள்ளனர்.
சுப்பர் மார்க்கெட்டுக்கு டீசல் எரிபொருளை வழங்குவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் இரண்டு கேன்களை தேடியபோது அவை காணாமல் போனது தெரியவந்ததையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா அமைப்பின் தரவுகளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் சோதனையிட்டுள்ளனர். இதன்போது விடயம் வௌிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், திம்புல பத்தனை பொலிஸாரின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு அறிவித்து கேன்களை ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.