இந்த நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மேலும், 75,000 குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 குடும்பங்கள் உப்புநீரில் இருந்து போஷாக்கைப் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாக அமையும் என்றும் படகொட வெளிப்படுத்தினார்.
நாட்டின் விவசாயத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கு வருடாந்தம் 900 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அமரவீர தெரிவித்துள்ளார்.