சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கை பிரஜைகள் மயங்கி விழுந்து மரணம்!

Date:

சென்னை விமானநிலையத்தில் இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா்.

சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண் பயணி ஒருவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். விமானநிலைய மருத்துவா்கள் அந்த நபரை பரிசோதித்ததில், அவா் மாரடைப்பால் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த பெண் பயணி இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த சிவகஜன்லிட்டி (43) என்பதும், சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அவா் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இதேபோல், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலிருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.

விசாரணையில், இவா் இலங்கையிலிருந்து வந்த ஜெயக்குமாா் என்பதும், இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவா், குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச்சோதனை பிரிவுக்காக நடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது.

இலங்கை பயணிகள் 2 போ் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...