யாழில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்!

0
157

கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா கலையரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கறுப்பு ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்படவர்களுக்கு மதத் தலைவர்களால் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், மதத் தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ். வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here