சுகாதார தொழிற் சங்கங்கள் பாரிய பணிப்புறக்கணிப்பு

0
47

எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதைத் தடுப்பதன் மூலம் விதிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யாமைக்கு எதிராக இதுஸநடத்தப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறினார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை சுற்றறிக்கைக்கு பதிலளிக்கவில்லை என ரவி குமுதேஷ் மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல அம்பலங்களை வெளியிடும் விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

100,000 காண்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் முறைகேடு நடந்தமைக்காக சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டணியின் தலைவர் டாக்டர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here