போராட்டத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு செயற்பட்டது

0
270

அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் போராட்டம் தொடர்பாக பல உண்மைகளை வெளியிட்டு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுமக்கள் போராட்டம் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக போராட்டம் தொடர்பாக தாம் சேகரித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு குழு செயற்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பலரின் பெயர்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த மே மாதம் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக பொஹொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் பாதுகாப்பு செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது போராட்டம் தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படும் விதத்தில் கடந்த காலங்களில் சட்டம் அமுல்படுத்தப்படாமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here