இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் தடுப்பு கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 4ஆம் திகதி விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமை தாங்குவார்.
குறித்த கலந்துரையாடலில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரச அதிகாரிகள் சுமார் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.