ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி நாடு 2048 இல் அபிவிருத்தி அடையும் என்றும் அதுவரை 25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் தாம் தலைமையிலான குழுவினரால் நாட்டின் 03 அடிப்படைப் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
திருட்டை நிறுத்தி அரசாங்க வினைத்திறனை உருவாக்குவது இன்றியமையாதது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது என எம்.பி. கூறினார்.
அதன்படி, மருத்துவம் மற்றும் மருத்துவமனை சேவை, உணவுப் பிரச்னை, எரிசக்தி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய பிரச்னைகள் மூன்றாண்டுகளில் தீர்க்கப்படும் என்கிறார்.