இலங்கை மீதான அமெரிக்க வரி 44% இலிருந்து 20% ஆக குறைப்பு

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பின்னர், அதனை 30% ஆக குறைப்பதாக, 2025 ஜூலை 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

2025 ஏப்ரல் 02ஆம் திகதி, அமெரிக்கா உள்நாட்டு பொருளாதார அவசரநிலையை அறிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் 10% வரி விதிக்கப்படும் எனவும், மிகப் பாரிய வர்த்தக நாடுகள் அல்லது வர்த்தகக் கூட்டமைப்புகளுக்கு மேலும் உயர்ந்த வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதை அவர் “விடுதலை தினம்” (Liberation Day) என குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னதாக சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெள்ளை மாளிகை தனது திருத்தப்பட்ட புதிய வர்த்தகக் கொள்கையை நேற்றிரவு வெளியிட்டுள்ளதோடு, புதிய வரி விதிப்புகளையும் அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 02 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட 10% “பொதுவான” வரி விகிதம் தொடரும் எனவும், அது அமெரிக்கா அதிகமாக ஏற்றுமதி செய்கிற நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக வசதிகள் கொண்ட நாடுகளுக்கு 15% புதிய வரி விகிதம் அமுலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாடுகளுக்கு இந்த 15% விகிதம் பொருந்தும். இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சில வரித் திருத்த விகிதங்களை விட குறைவாகவும், சில நாடுகளுக்கு இது அதிகமாகவும் காணப்படுகின்றது.

மேலும், 15% விகிதத்தைவிட அதிகமாக வரி விதிக்கப்படவுள்ள 12 இற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளதாகவும், அவை அமெரிக்காவுடனான அதிக வர்த்தக வாய்ப்பு கொண்ட நாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த புதிய தீர்வை வரித் திட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வராது எனவும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதலே அமுக்கு வரும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கத்துறை புதிய வரிகளை வசூலிக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நேரம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில நாடுகளுக்கான வரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • ஆப்கானிஸ்தான் 15%
  • அல்ஜீரியா 30%
  • அங்கோலா 15%
  • பங்காளதேஷ் 20%
  • பொலிவியா 15%
  • போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா 30%
  • போட்ஸ்வானா 15%
  • பிரேசில் 10%
  • புருனே 25%
  • கம்போடியா 19%
  • கெமரூன் 15%
  • சாட் 15%
  • கொஸ்டாரிகா 15%
  • கோட் டி`ஐவோயர் 15%
  • கொங்கோ ஜனநாயகக் குடியரசு 15%
  • ஈகுவாடோர் 15%
  • எக்குவடோரியல் கினியா 15%
  • ஐரோப்பிய ஒன்றியம்: நெடுவரிசை 1 வரி விகிதம் கொண்ட பொருட்கள் 15% ஐ விட அதிகமாக 0%
  • ஐரோப்பிய ஒன்றியம்: நெடுவரிசை 1 வரி விகிதம் கொண்ட பொருட்கள் 15% இற்கும் குறைவாக 15% மறை நெடுவரிசை 1 வரி விகிதம்
  • பால்க்லேண்ட் தீவுகள் 10%
  • பிஜி 15%
  • கானா 15%
  • கயானா 15%
  • ஐஸ்லாந்து 15%
  • இந்தியா 25%
  • இந்தோனேசியா 19%
  • ஈராக் 35%
  • இஸ்ரேல் 15%
  • ஜப்பான் 15%
  • ஜோர்தான் 15%
  • கசகஸ்தான் 25%
  • லாவோஸ் 40%
  • லெசதோ 15%
  • லிபியா 30%
  • லீச்சென்ஸ்டீன் 15%
  • மடகஸ்கார் 15%
  • மலாவி 15%
  • மலேசியா 19%
  • மொரீஷியஸ் 15%
  • மோல்டோவா 25%
  • மொசாம்பிக் 15%
  • மியன்மார் (பர்மா) 40%
  • நமீபியா 15%
  • நவுரு 15%
  • நியூசிலாந்து 15%
  • நிகரகுவா 18%
  • நைஜீரியா 15%
  • வடக்கு மசிடோனியா 15%
  • நோர்வே 15%
  • பாகிஸ்தான் 19%
  • பப்புவா நியூ கினியா 15%
  • பிலிப்பைன்ஸ் 19%
  • சேர்பியா 35%
  • தென்னாபிரிக்கா 30%
  • தென் கொரியா 15%
  • இலங்கை 20%
  • சுவிட்சர்லாந்து 39%
  • சிரியா 41%
  • தாய்வான் 20%
  • தாய்லாந்து 19%
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ 15%
  • துனிசியா 25%
  • துருக்கி 15%
  • உகண்டா 15%
  • ஐக்கிய இராச்சியம் 10%
  • வனுவாட்டு 15%
  • வெனிசுலா 15%
  • வியட்நாம் 20%
  • சம்பியா 15%
  • சிம்பாப்வே 15%

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

செம்மணி புதைகுழி இன அழிப்பின் சாட்சி!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி...

20% வரி குறைப்புக்கு சஜித் தரப்பில் இருந்து வாழ்த்து

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி 20% ஆக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை...

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமம்!

இலங்கையில் உள்ள மூன்று சர்வதேச விமான நிலையங்களில் சமீபத்தில் மீள திறக்கப்பட்ட...

முன்னாள் எம்பிக்கள் சிக்கலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட நேரத்திற்குள்...