அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் இலங்கைக்கான வரி விகிதாசாரத்தை 20 %வரை குறைத்திருப்பது எமது நாடு முகம் கொடுத்திருந்த சவாலை கருத்தில் கொள்கையில் குறிப்பிடத்தக்க சலுகையாக கருதினாலும் எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் பொருள் ஏற்றுமதியின் போது ஆசிய நாடுகள் இடையிலான போட்டி நிலைமையை கருத்தில் கொள்கையில் எமது நாடு ஒற்றுமையுடனும் சாதுரியத்துடனும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.
ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பில் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுத் திட்டங்களை வகுக்குமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடமும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிடும் நிறுவனங்களிடமும் தனியார் தொழில் முயற்சியாலர்கள் மற்றும் தொழில் அமைப்புகளிடமும் கேட்டுக்கொள்கிறது. இதன் போது அத்தியாவசிய கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றது. இலங்கையின் உற்பத்தி துறையை கருத்தில் கொள்கையில் குறைவான வினைத்திறன் உள்ள நாடாகவே கருதப்படுகிறது. அதை போன்று மின் கட்டணமும் அதிக அளவில் காணப்படுகின்றது. உலகின் அதிக விடுமுறைகள் கொண்ட நாடான எமது நாடு தொழில் துறையை பலவீன படுத்தக்கூடிய சூழலையே கொண்டுள்ளது. மேலும் துறைமுகங்கள் பொது போக்குவரத்து துறைகளில் ஏற்படும் தொடர் வேலை நிறுத்தங்கள் எமது நாட்டின் உற்பத்தி துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இந்த நிலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியத ஏனெனில் ஆசிய வளையத்தின் எம்முடன் போட்டியிடும் ஏனைய நாடுகள் உற்பத்திக்கு உகந்த சூழலைப் பேணி வருகின்றமை ஆகும். ஆகையால் மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி பயணிக்காமல் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள முடியாது என்பது எமது நம்பிக்கையாகும்.
ஆகையால் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடமும் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களிடமும் தேசப்பற்று உடைய மக்களிடமும் உண்மையான யதார்த்தத்தை புரிந்து கொண்டு எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒன்றுபட்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கரு ஜயசூரிய
தலைவர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்.