ரோஹித்தவும் ரணிலுக்கு ஆதரவு!

0
166

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தீர்மானித்துள்ளார்.

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த நாட்டைக் கொடுப்பதா?, அல்லது காலை பேசுவதை மாலையே மறக்கும் சஜித்துக்கு 22 ஆம் திகதி இந்த நாட்டைக் கொடுப்பதா? இந்த வாய்ச்சொல் தலைவர்களுக்கு நாட்டைக் கொடுப்பதா? அல்லது நாட்டிற்காக ஒரு முடிவை எடுப்பதா?, எனவே நான் உங்கள் கருத்தைக் கேட்டு தலை வணங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு தயாராகி வருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here