மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய நியமனம்: பொதுஜன பெரமுன அதிரடி

Date:

மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் கம்பஹாவும் ஒன்று, இந்த நியமனம் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

காலி மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்னைய மாவட்ட தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...